Home செய்திகள் தேசிய செய்திகள் அகிலேஷுக்கு விஎச்பி சவால்

அகிலேஷுக்கு விஎச்பி சவால்

புதுடெல்லி, ஜூன் 22- உத்​தரபிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயி​லில் காணிக்கை திருட்டு நடை​பெற்​ற​தாக பல புகார்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இது குறித்து விஎச்​பி.​யின் சர்​வ​தேச தலை​வர் அலோக் குமார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: தேர்​தல் ஆதாயத்​துக்​காக ராமர் பெயரைப் பயன்​படுத்​து​வோரை மக்​கள் ஒரு​ போதும் மன்​னிக்க மாட்​டார்​கள். உ.பி.​யின் 2027 சட்டப்பேரவை தேர்​தலில் வெற்றி பெறவே ராமர் கோயில் காணிக்கை விவ​காரத்தை அகிலேஷ் ஓர் ஆயுத​மாகப் பயன்படுத்துகிறார். அவர் எஸ்​ஐடி முன் ஆஜராகி ஆதா​ரங்​களை வழங்க வேண்​டும். கடந்த காலங்​களில், ‘ரா​மாலயா அறக்​கட்​டளை’ என்ற அமைப்​பும் செயல்​பட்​டது. அது தங்​கக் கோயில் கட்​டு​வ​தாக கூறி ஒவ்​வொரு இந்​து​ வை​யும் 10 கிராம் தங்​கம் வழங்க கேட்​டுக்​கொண்​டது. இந்த அறக்​கட்​டளை கோயில் கட்​டாதது குறித்​தும் விசா​ரணை நடத்தப்பட வேண்​டும். துரோகமோ அல்​லது அலட்​சி​யமோ, குற்றம் இழைத்​தவர் யா​ராக இருந்​தா​லும் அவர்​கள் சட்டப்படி, மிகக் கடுமை​யான தண்​டனையைப்​ பெற வேண்​டும்​. இவ்​வாறு அறிக்​கை​யில்​ கூறப்​பட்​டுள்​ளது.