Home செய்திகள் தேசிய செய்திகள் அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு

அனிமேஷன் பயிற்சி மையத்தில் விபரீதம்: தீ விபத்தில் 15 மாணவர்கள் உயிரிழப்பு

லக்னோ: ஜூன் 23-
உத்​தரப் பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உள்ள அனிமேஷன் பயிற்சி மையத்​தில் நேற்று நிகழ்ந்த தீ விபத்​தில் 15 மாணவர்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். உயிர் பிழைப்​ப​தற்​காக முதல் தளத்​தில் இருந்து கீழே குதித்த 4 மாணவர்​கள் காயமடைந்​தனர்.
விபத்​தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்​மு, பிரதமர் மோடி உள்​ளிட்ட தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.
உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதி​யில் இருந்து தலா ரூ.2 லட்​சம் கருணைத்​ தொகை வழங்​கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.
உத்​தரப் பிரதேச மாநிலம் லக்னோ அருகே உள்​ளது அலிகஞ்ச் பகு​தி. இங்​குள்ள வணிக வளாகத்​தில் விளை​யாட்டு மையம், செல்​லப் பிராணி​களுக்​குத் தேவை​யான பொருட்​கள் விற்​பனை மையம், கிளினிக் மற்​றும் பல்​வேறு கடைகள் உள்​ளன. இதன் முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையம் செயல்​பட்டு வந்​தது. 15 முதல் 17 வயதுக்கு உட்​பட்ட பல மாணவர்​கள் இங்கு பயிற்சி பெற்று வந்​தனர்.இந்​நிலை​யில், இந்த வணிக வளாகத்​தின் 3-வது தளத்​தில் நேற்று மதி​யம் திடீரென தீப்​பிடித்​தது. சிறிது நேரத்​தில், அடுத்​தடுத்த தளங்​களுக்​கும் தீ மளமளவென பரவியது. இதில், முதல் தளத்​தில் அனிமேஷன் பயிற்சி மையத்​தில் இருந்த மாணவர்​கள் சிக்​கிக் கொண்​டனர்.
நுழைவு​வா​யில் வழி​யாகவோ, முன்​பகுதி வழி​யாகவோ அவர்​களால் தப்​பித்து வெளி​யேற முடிய​வில்​லை.
ஜன்னலை உடைத்து குதித்தனர்: இதனால், பயிற்சி மையத்​தின் ஜன்​னல்​களை மாணவர்​கள் உடைத்​தனர். அதன் வழி​யாக 7 மாணவர்​கள் கீழே குதித்​தனர்.
அதில் ஒரு மாணவன் சுற்​றுச் சுவரில் விழுந்​த​தில் எலும்பு முறிவு ஏற்​பட்​டது. அவர் அரு​கில் உள்ள மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டார். ஜன்​னல் வழி​யாக குதித்த மாணவர்​களைக் காப்​பாற்ற அக்​கம் பக்​கத்​தினர் உதவினர்.
மாணவர்​கள் முதல் மாடி​யில் இருந்து குதிப்​பது மற்​றும் ஜன்​னலில் தொங்​கிக் கொண்​டிருந்த காட்​சிகள் வலை​தளங்​களில் பரவி காண்​போரை பதற​வைத்​தது.பயிற்சி மையத்​துக்​குள் மரத்​தால் செய்​யப்​பட்ட மேஜை, நாற்​காலிகள் அதி​கம் இருந்​த​தால், தீ வேக​மாகப் பரவியது. சுமார் ஒரு மணி நேர​மாகப் பற்​றியெரிந்த தீயை தீயணைப்பு படை​யினர் போராடி அணைத்​தனர். தேசிய பேரிடர் மீட்​புக் குழு​வினரும் விரைந்து வந்து மீட்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். அனிமேஷன் மையத்​தின் பக்​க​வாட்டு சுவரை உடைத்து மாணவர்​கள் மீட்​கும் முயற்​சிகளும் தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்​டன. தீ முழு​வது​மாக அணைக்​கப்​பட்ட பிறகு, பயிற்சி மையத்​தில் இருந்து 15 மாணவர்​களின் உடல்​கள் மீட்​கப்​பட்​டன.