Home செய்திகள் தேசிய செய்திகள் ஜூலை 1-ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்வு

ஜூலை 1-ம் தேதி முதல் பாஸ்போர்ட் கட்டணங்கள் உயர்வு

புதுடெல்லி, ஜூன் 26- ​பாஸ்​போர்ட் கட்​ட​ணங்​கள் ஜூலை 1ம் தேதி முதல் உயர்த்​தப்​படு​வ​தாக மத்​திய அரசு அறி​வித்​துள்​ளது. இதன்படி, 18 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட விண்ணப்பதாரர்களுக்கு சாதாரண திட்​டத்​தின் கீழ், புதிய 36 பக்க பாஸ்​போர்ட் அல்​லது அதை மீண்​டும் பெறு​வதற்​கான கட்டணம் தற்​போதுள்ள ரூ.1,500-லிருந்து ரூ.2,500 ஆக உயரும். அதே நேரத்​தில், தத்​கல் கட்டணம் ரூ.3,500-லிருந்து ரூ.5,000 ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது. இதே​போல், 60 பக்க பாஸ்​போர்ட்​டுக்​கான கட்​ட​ணம் சாதாரண பிரி​வின் கீழ் ரூ.2,000-லிருந்து ரூ.3,500 ஆகவும், தத்​கல் பிரி​வின் கீழ் ரூ.4,000-லிருந்து ரூ.6,000 ஆகவும் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. கடந்த 2012ம் ஆண்​டுக்​குப் பிறகு தற்​போது​தான் பாஸ்​போர்ட் கட்​ட​ணம் உயர்த்​தப்​பட்​டுள்​ளது. தொலைந்து போன அல்​லது சேதமடைந்த பாஸ்​போர்ட்​டு​களுக்​குப் பதிலாக மாற்று 36 பக்க பாஸ்போர்ட்டுக்கு சாதாரண திட்​டத்​தின் கீழ் ரூ.5,000 மற்​றும் தத்கல் திட்டத்தின் கீழ் ரூ.7,500 கட்​ட​ணம் வசூலிக்​கப்​படும். அதே நேரத்​தில் 60 பக்க மாற்று பாஸ்​போர்ட்​டுக்கு முறையே ரூ.6,000 மற்​றும் ரூ.8,500 கட்​ட​ணம் ஆகும். 18 வயதுக்​குட்​பட்ட விண்​ணப்​ப​தா​ரர்​களுக்கு புதிய அல்​லது மீண்​டும் வழங்​கப்​படும் 36 பக்க பாஸ்​போர்ட்​டுக்கு சாதாரண திட்​டத்​தின் கீழ் ரூ.1,750, தத்கல் திட்​டத்​தின் கீழ் ரூ.4,250 கட்​ட​ணம் ஆகும்.