Home மாவட்டங்கள் பெங்களூர் ஆர்.அசோக் அதிரடி கேள்வி

ஆர்.அசோக் அதிரடி கேள்வி

பெங்களூரு: ஜூலை 3:
கர்நாடகாவில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் முற்றிலும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் அதிரடி குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார். இந்த முறைகேடுகளின் பின்னணியில் உள்ள கருப்பு ஆடுகள் யார் என்று அவர் ஆவேசமாக கேள்வி விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ‘எக்ஸ்’ (ட்விட்டர்) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்காளர் பட்டியலின் சிறப்பு மற்றும் விரிவான திருத்தப் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த செயல்முறையின் புனிதத்தன்மையையே அடியோடு கெடுக்கும் வகையிலான கடுமையான அக்கிரமங்களும், முறைகேடுகளும் ஆங்காங்கே வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.
தலைநகர் பெங்களூரு உட்பட பல முக்கிய பிராந்தியங்களில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் விதிமுறைப்படி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை நேரில் சந்தித்து சரிபார்ப்பு நடத்த வேண்டும். ஆனால், இந்த விதிகள் எதையும் மதிக்காமல் அதிகாரிகள் அப்பட்டமான அலட்சியம் காட்டி வருகின்றனர்.”
இவ்வாறு ஆர்.அசோக் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் இப்போது கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.