Home செய்திகள் உலக செய்திகள் “இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க மாட்டேன்” – இந்திரா நூயி கருத்தால் சர்ச்சை

“இந்தியாவில் இருந்திருந்தால் சிஇஓ ஆகியிருக்க மாட்டேன்” – இந்திரா நூயி கருத்தால் சர்ச்சை

வாஷிங்டன், ஜூலை 4- பெப்சிகோ நிறு​வனத்​தின் முன்​னாள் தலை​வரும் தலை​மைச் செயல் அதி​காரி​யு​மான இந்திரா நூயி, அமெரிக்காவைத் தவிர இந்​தியா உள்​ளிட்ட வேறு எந்த நாட்​டிலும் தம்​மால் பெரு நிறு​வனத்​தின் சிஇஓ ஆகி​யிருக்க முடி​யாது என்று கூறியிருப்​பது சர்ச்​சையை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
இந்​திய வம்​சாவளியை சேர்ந்த இந்​திரா நூயி, கடந்த புதன்கிழமை அமெரிக்​கா​வின் முன்​னாள் வெளி​யுறவு அமைச்​சர் காண்​டலீசா ரைஸுடன் கலந்​துரை​யாடி​னார். அப்​போது அவர் அமெரிக்​கா​வில் கிடைத்த வாய்ப்​பு​கள் குறித்​து பேசி​னார். ‘‘இந்​தியா உட்பட உலகில் வேறு எந்த நாட்​டிலும் என்னால் சிஇஓ ஆகி​யிருக்க முடி​யாது. ஏனெனில் தகு​திக்கு முக்கியத்​து​வம் அளிப்​பது அமெரிக்க நடை​முறை​யாக உள்​ளது. இங்​குள்ள வழி​காட்​டிகள் நீங்​கள் ஆணா, பெண்​ணா, என்ன இனம், என்ன பாலினம் என்று பார்க்க மாட்​டார்​கள். சிறந்த மூளை உள்​ளவர்​கள் மட்​டுமே உயர்ந்த இடத்​திற்கு வர வேண்​டும் என்று அவர்​கள் விரும்​பு​வார்​கள்’’ என்று கூறி​னார். மேலும், குடியேறிய​வர்​களுக்கு அமெரிக்கா வழங்​கும் வாய்ப்​பு​கள் வேறு எங்​கும் கிடைக்​காதவை. உலகின் மிகச்​சிறந்த நாடு அமெரிக்கா என்​றும் அவர் புகழ்ந்​துரைத்​தார். இந்​த கருத்​து​கள் சமூக ஊடகங்​களில் பெரும் கவனத்தை பெற்​றுள்​ளன. இந்​திரா நூயி​யின் இந்த கருத்​துக்கு ஆதர​வாக ஒரு தரப்​பினரும் எதி​ராக மற்​றொரு தரப்​பினரும் விவா​தித்து வரு​கின்​றனர். இந்​தி​யா​வின் வளர்ச்சி மற்​றும் தகுதி அடிப்​படையி​லான வாய்ப்​பு​களை நூயி அநி​யாய​மாக நிராகரித்​து​விட்​ட​தாக ஒரு தரப்​பினர் குற்​றம் சாட்​டு​கின்​றனர். மறு​புறம், இந்​தி​யா​வில் இருக்​கும் கட்டமைப்பு ரீதி​யான தடைகள் குறித்த சங்​கட​மான உண்​மை களையே இவரது கருத்​துகள் பிர​திபலிக்​கின்றன என்று மற்​றொரு தரப்​பினர்​ வா​திடுகின்​றனர்​.