Home செய்திகள் தேசிய செய்திகள் ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு ஆலை

ஈபிள் டவரை விட 40 மடங்கு அதிகமான இரும்பு கொண்டு கட்டப்பட்ட சுத்திகரிப்பு ஆலை

ஜெய்ப்பூர், ஜூலை 4- பி​ரான்​ஸில் உள்ள ஈபிள் டவரை விட 40 மடங்​குக்​கும் அதி​க​மான இரும்பு பயன்​படுத்​தப்​பட்டு கட்​டப்​பட்​டுள்ள மிகப்​பெரிய சுத்திகரிப்பு ஆலையை பிரதமர் நரேந்​திர மோடி இன்று தொடங்கி வைக்​க​வுள்​ளார். ராஜஸ்​தான் மாநிலம் பச்​சபத்ரா பகு​தி​யில் இந்​துஸ்​தான் பெட்ரோலி​யம் கார்ப்​பரேஷன் நிறு​வனத்​தின் (எச்​பிசிஎல்) ராஜஸ்தான் ரிபைனரி லிமிடெட் ​(எச்​ஆர்​ஆர்​எல்) சார்​பில் மிகப்​பெரிய சுத்​தி​கரிப்பு ஆலை கட்​டப்​பட்​டுள்​ளது. இந்த மாபெரும் சுத்தி​கரிப்பு ஆலை சுமார் ₹79,459 கோடி செல​வில் உருவாக்கப்பட்டுள்​ளது. 4,500 ஏக்​கர் பரப்​பள​வில் இந்த ஆலை மிகச் சிறந்த முறை​யில் கட்​டமைக்​கப்​பட்​டுள்​ளது. இது நமது நாட்டின் முதல் அதிநவீன பிஎஸ்-6 தரத்​திலான பெட்ரோ கெமிக்கல் வளாகம் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. பிரான்​ஸில் உள்ள உலக அதிச​யங்​களுள் ஒன்​றான ஈபிள் டவர் கட்டு​வதற்கு பயன்படுத்திய இரும்பின் அளவை விட 40 மடங்குக்கும் அதி​க​மான இரும்பு கொண்டு இந்த சுத்​தி​கரிப்பு ஆலை, பெட்ரோ கெமிக்​கல் வளாகம் அமைந்​துள்​ளது. இத்​திட்​டம் நாட்​டின் எரிசக்தி பாது​காப்பை மேம்​படுத்​து​ம் என எதிர்பார்க்கப்படு​கிறது. இதன் ஆண்டு உற்​பத்​தித் திறன் 9 மில்லியன் மெட்​ரிக் டன்​களாகும். இதில், 1.5 மில்​லியன் டன் கச்சா எண்​ணெய் ராஜஸ்​தானின் மங்களா எண்​ணெய் வயல்​களி​லிருந்து பெறப்​படும். மீத​முள்ள 7.5 மில்​லியன் டன் கச்சா எண்​ணெய் இறக்​குமதி செய்​யப்​படும். இந்தச் சுத்​தி​கரிப்பு நிலை​யம் பிட்​டுமன், நாப்​தா, பல்​வேறு பெட்ரோகெமிக்​கல் பொருட்​கள் போன்​றவற்றை உற்​பத்தி செய்யும். இத்​திட்​டம் சுத்​தி​கரிக்​கப்​பட்ட பெட்​ரோலியப் பொருட்​களை இறக்குமதி செய்​வ​தில் இந்​தியா கொண்​டுள்ள சார்ந்​திருக்​கும் நிலையை குறைப்​ப​தோடு, ஏற்​றுமதி திறனை​யும் வலுப்​படுத்​தும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. 487 கி.மீ நீள​முள்ள குழாய் வழித்தடம் இந்​தச் சுத்​தி​கரிப்பு நிலை​யத்தை முந்த்ரா துறைமுகத்துடன் நேரடி​யாக இணைக்​கிறது. பிரதமர் நரேந்​திர மோடி இந்த சுத்​தி​கரிப்பு தொழிற்​சாலை​யை இன்​று தொடங்​கி வைக்​கவுள்​ளார்​.