Home செய்திகள் தேசிய செய்திகள் சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர்

சந்தூர் இசைக் கருவியை அற்புதமாக இசைத்த ஜப்பான் பிரதமர்

புதுடெல்லி: ஜூலை 4-
டெல்லி வந்​துள்ள ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, இந்​தி​யா​வின் பாரம்​பரிய சந்தூர் இசைக் கருவியை மிக​வும் அற்புத​மாக இசைத்​தார்.
இந்​தோ- பெர்​சி​யன் வகை இசைக் கருவி​களில் ஒன்று சந்​தூர். இந்த இசைக் கருவி ஜம்மு காஷ்மீரில் மிக​வும் பிரபல​மானது. இதில் 100 நரம்பு கம்​பிகள் உள்​ளன. இதன் ​காரண​மாக பண்​டைய காலங்​களில் சந்​தூர் இசைக் கரு​வியை ‘‘சத தந்த்ரி வீணை’’ என்றழைத்​தனர். டெல்​லி​யில் உள்ள ஹைத​ரா​பாத் இல்​லத்​தில் பிரதமர் மோடியை ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி சந்​தித்​துப் பேசி​னார். அங்கு அவருக்கு விருந்து அளிக்​கப்​பட்​டது. அப்​போது பல இசைக் கருவி​கள் மூலம் அவருக்கு உற்​சாக வரவேற்பு அளிக்கப்​பட்​டது.சந்​தூர் இசைக்​கரு​வியை இசைத்த கலைஞர், ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்​சி​யை சந்​தூரை இசைக்க அழைப்பு விடுத்​தார். உடனிருந்த பிரதமர் மோடி சந்​தூரை இசைப்​ப​தற்​கான கம்பிகளை டகாய்ச்​சி​யிடம் வழங்​கி​னார். பிரதமர் மோடி​யின் அறி​வுரைப்​படி சந்​தூர் இசைக் கரு​வியை டகாய்ச்சி மிக​வும் அற்புத​மாக இசைத்​தார். பிரதமர் மோடி உட்பட அங்​கிருந்த அனை​வரும் கரவொலி எழுப்பி மனதார வாழ்த்து தெரி​வித்​தனர்.ஜப்​பான் பிரதமர் சனே டகாய்ச்சி பள்​ளிப் பரு​வம் முதலே இசையில் மிகுந்த ஆர்​வம் மிக்​கவர். குறிப்​பாக டிரம்ஸ் இசைப்பதில் அவர் தேர்ச்சி பெற்​றவர். பல்​வேறு இசைக் கச்சேரிகளில் அவர் டிரம்ஸ் இசைத்​துள்​ளார். முதல் முயற்சியிலேயே அவர் சந்​தூர் இசைக் கரு​வியை அற்​புத​மாக இசைத்​தது அனை​வரின் கவனத்​தை​யும் ஈர்த்​துள்​ளது. இந்த வீடியோ வைரலாக பரவி வரு​கிறது. பிரதமர் சனே டகாய்ச்சி சமூக வலை​தளத்​தில் வெளியிட்டபதிவில், “பிரதமர் மோடி மிகச் சிறப்​பான விருந்​தினை அளித்​தார். இந்​திய உணவு வகை​களின் சுவை, பிரதமர் மோடியின் உபசரிப்பை வாழ்​நாளில் மறக்​கவே முடி​யாது. ஜப்பான், இந்​தியா நட்​புறவு மட்​டுமன்றி பல்​வேறு சர்​வ​தேச விவகாரங்​கள் குறித்​தும் பிரதமர் மோடி​யுடன் மனம் திறந்து பேசினேன். இரு நாடு​கள் இடையி​லான உறவு புதிய உச்​சத்தை தொடும்’’ என்​று தெரிவித்துள்​ளார்​.