Home மாவட்டங்கள் பெங்களூர் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

41 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை

சென்னை: ஜூலை 4-
தமிழகம் முழு​வதும் மாநக​ராட்​சி, நகராட்​சி, பேரூ​ராட்​சி, வட்​டார வளர்ச்சி அலு​வல​கங்​கள் என 41 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் ஒரே நேரத்​தில் நடத்​திய சோதனை​யில், கணக்​கில் வராத பணம் ரூ.58 லட்சம் கைப்​பற்​றப்​பட்​டது. ஆன்​லைன் பணப் பரிவர்த்​தனை தொடர்​பான ஆவணங்​களும் சிக்​கின.
பொது​மக்​களுக்கு வழங்​கப்​படும் அரசு சேவை​களுக்கு நிர்​ண​யிக்​கப் ​பட்ட கட்​ட​ணங்​களை மட்​டுமே வசூலிக்க வேண்​டும் என்ற விதிமுறை இருந்​தா​லும், சில அலு​வல​கங்​களில் பல்​வேறு சேவை​களுக்கு லஞ்​சம் கேட்​கப்​படு​வ​தாக தொடர்ந்து புகார்​கள் எழுந்து வந்​தன. குறிப்​பாக, கட்​டிட வரைபட அனு​ம​தி, சொத்து வரி பெயர் மாற்​றம், வரி மதிப்​பீடு மாற்​றம், குடிநீர் மற்​றும் பாதாள சாக்​கடை இணைப்​பு, தொழில் உரிமம் வழங்​குதல் மற்​றும் புதுப்​பித்​தல், பிறப்பு – இறப்பு பதிவு​களில் திருத்​தம், ஆக்​கிரமிப்பு தொடர்​பான நடவடிக்​கைகள், அரசு ஒப்​பந்​தப் பணி​களுக்​கான பில் ஒப்​புதல், சாலை, வடி​கால், தெரு​விளக்கு உள்​ளிட்ட வளர்ச்​சிப் பணி​களுக்​கான ஒப்​பந்​தங்​கள், அரசு வீடு திட்ட பயனாளி​கள் ஒப்​புதல், சுயஉதவிக் குழு திட்​டங்​கள், கிராம பஞ்​சா​யத்து நிர்​வாக அனு​ம​தி​கள், அரசு நலத்​திட்​டங்​களில் பெயர் சேர்த்​தல் உள்​ளிட்ட பணி​களுக்கு லஞ்​சம் பெறப்​படு​வ​தாக குற்​றச்​சாட்​டு​கள் எழுந்​தன.
பணம் கொடுக்​காதவர்​களின் கோப்​பு​கள் வேண்​டும் என்றே தாமதம் செய்​யப்​படு​வ​தாக​வும், சில நேரங்​களில் காரணமின்றி நிராகரிக்​கப்​படு​வ​தாக​வும் ​மக்​கள் புகார் தெரி​வித்​தனர்.
50-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள்:
இந்த புகார்​கள் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத்​ துறை இயக்​குநரும், கூடு​தல் டிஜிபி​யு​மான அருண், மாநிலம் முழு​வதும் ஒருங்​கிணைந்த சோதனை நடத்த உத்​தர​விட்​டார். இதையடுத்து 50-க்​கும் மேற்​பட்ட தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டன. நாள் முழுக்க வசூலாகும் தொகை மாலை நேரத்​தில் அதி​காரி​களிடம் அதி​கம் இருக்​கும் என்​ப​தால், நேற்று அலு​வல​கப் பணி முடி​யும் நேரத்​தில் திடீரென போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.