Home செய்திகள் உலக செய்திகள் சிறையில் கைதிகள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

சிறையில் கைதிகள் மோதல்: 2 பேர் உயிரிழப்பு

கொழும்பு, ஜூலை 6- இலங்கை​யின் மேற்​குக் கடற்​கரை நகர​மான நீகும்​போ​வில் உள்ள சிறை​யில் நேற்று ஏற்​பட்ட மோதலில் இரு​வர் உயிரிழந்​தனர். இந்த ​சிறை​யில் 1800 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 2 கோஷ்டிகளுக்கு இடையே நேற்று கடும் மோதல் ஏற்பட்டது. இ​தில் இரு கைதி​கள் கொல்​லப்​பட்​டதுடன், பலர் காயமடைந்ததனர். படுகாயமடைந்த 34 கைதி​கள் மருத்​து​வ​மனைக்கு அனுப்​பப்​பட்​டுள்​ளனர்​. இந்த மோதலின்போது, சிறையில் டெங்கு காய்ச்​சல் பரவுவதைக் கண்​டித்து பெண் கைதிகள் குழு ஒன்று கட்​டடத்​தின் மேற்​கூரை​யில் ஏறி போராட்டம் நடத்​தி​யது. நிலை​மை​யைக் கட்​டுக்​குள் கொண்​டுவர காவல்​துறை​யின் சிறப்​புப் படைப்​பிரிவு அழைக்​கப்​பட்​டது.