Home செய்திகள் தேசிய செய்திகள் எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

எல்என்ஜி காஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்

புதுடெல்லி: ஜூலை 6-
எல்​என்ஜி (திரவ இயற்கை எரிவாயு) மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களும் நீக்​கப்​பட்​டிருப்​ப​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.
அமெரிக்​கா – ஈரான் இடையே கடந்த பிப்.28 முதல் போர் நடை​பெற்று வந்​தது. கடந்த ஏப்.​8-ம் தேதி இருதரப்​பும் இணைந்து தற்​காலிக போர் நிறுத்​தத்தை அமல்படுத்தின. நீண்ட பேச்​சு​வார்த்​தைக்​குப் பிறகு கடந்த ஜூன் 18-ம் தேதி இரு நாடு​கள் இடையே தற்​காலிக அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.
போர்க் காலத்​தில் ஈரானை ஒட்​டிய ஹார்​முஸ் ஜலசந்தி மூடப்​பட்டு உலகம் முழு​வதும் கச்சா எண்​ணெய்க்கு கடும் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. இந்​தி​யா​வில் பெட்​ரோல், டீசல், எல்​பிஜி சமையல் காஸ் மற்​றும் எல்​என்ஜி காஸுக்குதட்​டுப்​பாடு ஏற்​பட்​டது. பெட்​ரோல், டீசல், காஸ் விநி​யோகத்​துக்கு பல்​வேறு கட்​டுப்​பாடு​கள் விதிக்​கப்​பட்​டன.
கடந்த மாதம் 18-ம் தேதிக்​குப் பிறகு ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து இயல்பு நிலைக்கு திரும்​பியது. இதைத் தொடர்ந்து பெட்​ரோல், டீசல், சமையல் காஸ் மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களை​யும் மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் கடந்த 1-ம் தேதி நீக்​கியது. ஆனால், தொழிற்​சாலைகளில் பயன்​படுத்​தப்​படும் எல்​என்ஜி காஸுக்​கான கட்​டுப்​பாடு​கள் நீக்​கப்​பட​வில்​லை.
இந்​தி​யா​வின் எல்​என்ஜி தேவை​யில் சுமார் 65 சதவீதம் வளை​குடா நாடு​களில் இருந்து இறக்​குமதி செய்​யப்​படு​கிறது. தற்​போது வளை​குடா நாடு​களின் சரக்கு கப்​பல் போக்​கு​வரத்து சீரடைந்துள்ள​தால் எல்​என்ஜி மீதான அனைத்து கட்​டுப்​பாடு​களும் நீக்​கப்​பட்டு இருப்​ப​தாக மத்​திய பெட்​ரோலிய அமைச்​சகம் அறி​வித்​துள்​ளது.