Home செய்திகள் உலக செய்திகள் இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்

இந்தோனேசியாவில் ஐஐஎம் வளாகம்

ஜகார்த்தா: ஜூலை 8-
இந்​தோ​னேசி​யா​வில் ஐஐஎம் (பெங்​களூரு) வளாகம் அமைக்​கப்​படும் என்று அந்​நாட்டு தலைநகர் ஜகார்த்​தா​வில் பிரதமர் நரேந்​திர மோடி அதி​காரப்​பூர்​வ​மாக நேற்று அறி​வித்​தார். அத்​துடன், பாது​காப்​பு, கல்​வி, தொழில்​நுட்​பம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ), விண்​வெளித் துறை​களில் இரு நாடு​களும் இணைந்து செயல்பட முடி​வெடுக்​கப்​பட்​டுள்​ளது.இந்​தோனேசி​யா, ஆஸ்​திரேலி​யா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகளுக்​குப் பிரதமர் மோடி அரசு முறை சுற்​றுப்​பயணம் மேற்​கொண்​டுள்​ளார். முதல் கட்​ட​மாக இந்​தோனேசியா சென்ற பிரதமர் மோடியை ஜகார்த்தா விமான நிலையத்தில் அதிபர் பிரபோவோ சுபியந்​தோ கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் பிரதமர் மோடியை உற்​சாக​மாக வரவேற்று முப்​படை அணிவகுப்பு மரி​யாதை அளிக்​கப்​பட்​டது.
அந்​நாட்டு அதிபர் பிரபோவோ சுபியந்​தோவை தலைநகர் ஜகார்த்​தா​வில் உள்ள மெர்​டேகா மாளி​கை​யில் நேற்று சந்​தித்​துப் பேசி​னார். இந்​தச் சந்திப்​பின் போது, ‘‘இந்​தியா மற்​றும் இந்​தோ​னேசியா இடையி​லான இருதரப்பு உறவு​களில் ஒரு புதிய பொற்​காலம் இது’’ என்று பிரதமர் மோடி பெரு​மிதம் தெரி​வித்​தார்.
இந்​தி​யக் கல்​வியை உலகளா​விய ரீதி​யில் கொண்டு செல்​லும் முக்கிய முயற்​சி​யாக, புகழ்​பெற்ற ஐஐஎம் பெங்​களூரு கல்வி நிறுவனத்​தின் முதல் சர்​வ​தேச வளாகம் இந்​தோ​னேசி​யா​வில் நிறுவப்​படும் என்று பிரதமர் மோடி அதி​காரப்​பூர்​வ​மாக அறிவித்தார். இது ஆசி​யான் பிராந்​திய மாணவர்​களுக்​குப் பெரிதும் உதவும்.பாது​காப்​புத் துறை​யில் மிகப்​பெரிய மைல் கல்​லாக, இந்​திய – ரஷ்ய கூட்டு தயாரிப்​பான ‘பிரம்​மோஸ்’ க்ரூஸ் ஏவு​கணை​கள், இந்​தி​யா​வின் உள்​நாட்டு தயாரிப்​பான ‘அஸ்ட்​ரா’ வான் வழி ஏவு​கணை​களை இந்​தோ​னேசி​யா​வுக்கு வழங்​கு​வதற்​கான ஒப்​பந்​தங்​கள் இறுதி செய்​யப்​பட்​டுள்​ளன. பிலிப்​பைன்​ஸைத் தொடர்ந்து பிரம்​மோஸ் ஏவு​கணை​யைப் பெறும் 2-வது ஆசி​யான் நாடு இந்​தோ​னேசியா என்​பது குறிப்​பிடத்​தக்​கது.