
பெங்களூரு, ஜூலை 9- தமிழகத்திற்கு தற்போது காவிரி நீரைத் திறந்துவிட இயலாத நிலையில் உள்ளதாக கர்நாடகா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, போதிய மழையின்மை காரணமாக மாநிலம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மற்றும் கர்நாடக அணைகளிலும் நீர் இருப்பு குறைவாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். கர்நாடகாவில் போதிய பருவமழை இல்லாததால் இங்கிருக்கும் அணைகள் நிரம்பவில்லை.எனவே தமிழகத்துக்கு தண்ணீர் தர இயலாது என்று ராமலிங்க ரெட்டி கூறினார். தமிழ்நாட்டுக்கு நீர் தர வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியமும் எங்களுக்கு உத்தரவிடவில்லை.ஏனென்றால் கர்நாடகாவில் நீர் இல்லை என்பது அவர்களுக்கே தெரியும். நீர் திறக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் இருந்து கோரிக்கை வந்ததாக எனக்குத் தெரியவில்லை எனவும் அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறி உள்ளார்.


















