Home மாவட்டங்கள் பெங்களூர் கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

கே.ஆர்.எஸ் அணை நீர்வரத்துஅதிகரிப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி

மண்டியா: ஜூலை 9-
கர்நாடக மாநிலம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் குடகு மலைப்பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, மண்டியா மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், அணைக்கான நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அணைக்கு வினாடிக்கு 7,531 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
நேற்று காலை நீர்வரத்து 5,734 கன அடியாக இருந்த நிலையில், இன்று ஒரே நாளில் வரத்து பெருமளவு உயர்ந்துள்ளது.
மொத்தம் 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் அணையின் தற்போதைய நீர்மட்டம் 81.55 அடி**யாக உள்ளது. குடகு பகுதியில் மழை தொடர்ந்து நீடித்து வருவதால், வரும் நாட்களில் அணையின் நீர்மட்டம் மிக வேகமாக உயரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நீர்வரத்து அதிகரிப்பால் நடப்பு பருவ சாகுபடியை நம்பியுள்ள காவிரி பாசன பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.