Home செய்திகள் தேசிய செய்திகள் வக்பு வாரி​யத்​தில் இந்​துக்​கள் நியமனம்: உ.பி. அமைச்​சர் விளக்கம்

வக்பு வாரி​யத்​தில் இந்​துக்​கள் நியமனம்: உ.பி. அமைச்​சர் விளக்கம்

லக்னோ, ஜூலை 10- ம.பி. முதல்​வர் மோகன் யாதவ் கடந்த ஞாயிற்றுக் கிழமை அம்​மாநில வக்பு வாரி​யத்தை மறு சீரமைத்​து, அதில் 2 இந்து உறுப்​பினர்​களை நியமித்​தார். வக்பு (திருத்த) சட்​டம், 2025-ன் கீழ் அமைக்​கப்​பட்ட இந்​தப் புதிய வாரி​யம், இந்து உறுப்​பினர்​கள் நியமிக்​கப்​பட்ட நாட்​டின் முதலாவது மாநில அளவி​லான வக்பு வாரி​யம் ஆகும். இது குறித்து உத்தரபிரதேச சிறு​பான்​மை​யினர் நலத்​துறை இணை​யமைச்​சர் டேனிஷ் ஆசாத் அன்​சாரி கூறுகையில், ”வக்பு சட்​டத் திருத்​தத்​தின் அடிப்​படை​யில் ​தான் ம.பி. வக்பு வாரி​யத்​தில் 2 இந்​துக்​கள் சேர்க்​கப்​பட்​டனர். வக்பு சொத்​துகளை சிறப்​பாக பராமரிக்​கவே இந்த சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டுவந்தது” என்றார்.