
டெல்லி: ஜூலை 15.
உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி என போலந்து நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி தெரிவித்தார். டில்லியில் நடந்த இந்தியா- போலந்து கூட்டு பொருளாதார ஆணையக் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு நிருபர்களிடம் டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் பிரபலமான, மதிக்கப்படும் ஒரு உலகத்தரம் வாய்ந்த அரசியல்வாதி ஆவார். இந்தியாவுக்கு ரஷ்யாவுடன் நீண்டகால உறவு உள்ளது.
பிரதமர் மோடி தன்னிடம் கூறுவதை அதிபர் புடின் உண்மையில் கவனத்தில் கொள்கிறார். ரஷ்யா-உக்ரைன் போரின் ஒரு நெருக்கடியான தருணத்தில் பிரதமர் மோடி ஏற்கனவே அந்த செல்வாக்கை நிரூபித்திருக்கிறார்.
உக்ரைன் மீது 2022ல் ரஷ்யா அணுகுண்டு தாக்குதல் நடத்த இருந்ததை, புடினிடம் பேசி தடுத்து நிறுத்தியவர் இந்திய பிரதமர் மோடி. இவ்வாறு டியோபில் பர்தோஸூவ்ஸ்கி கூறினார்.













