Home மாவட்டங்கள் பெங்களூர் ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு – முதல்வர் விஜய் எச்சரிக்கை

ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிப்பு – முதல்வர் விஜய் எச்சரிக்கை

சென்னை: ஜூலை 16-
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ள பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய முக்கிய அறிவிப்புகள் குறித்தும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், புதிய தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.இந்த அமைச்சரவை கூட்டத்தின் போது, முதல்-அமைச்சர் விஜய் அமைச்சர்களுக்கு பல்வேறு கடுமையான உத்தரவுகளையும், எச்சரிக்கைகளையும் பிறப்பித்துள்ளார். அதன் விவரங்கள் பின்வருமாறு:
ஊழல் புகாரில் சிக்கும் அமைச்சர்கள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் அமைச்சர்களின் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று முதல்வர் விஜய் எச்சரித்துள்ளார்.வரவிருக்கும் பட்ஜெட்டில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளை அமல்படுத்துவது மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கான ஒப்புதல்கள் குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட சில அமைச்சர்களைக் குறிப்பிட்டு, மக்கள் பணிகளைத் தொய்வின்றி செய்ய வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். மேடம் தமிழ்நாட்டு மக்கள் அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் பட்ஜெட் தயாரிப்பது குறித்தும் அதற்கான நிதி ஆதாரங்கள் குறித்தும் முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தினார் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்படுவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.