Home செய்திகள் தேசிய செய்திகள் டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?

டிஜிபி தற்கொலை: நடந்தது என்ன?

அகர்தலா: ஜூலை 21-
திரிபுரா மாநில காவல் துறைத் தலைவர் (டிஜிபி) அனுராக் தன்கர் (60), தனது அலுவலகக் குளியலறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
திரிபுரா மாநில காவல்துறைத் தலைவர் அனுராக் தன்கர், அகர்தலாவில் உள்ள காவல்துறை தலைமையகத்தில் உள்ள குளியலறையில் நேற்று தூக்கில் தொங்கியபடி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான அவர் உடனடியாக மீட்கப்பட்டு அகர்தலாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மற்றும் கோவிந்த் வல்லப் பந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதுகுறித்து மூத்த மருத்​து​வர் பிரதீப் பவுமிக் கூறும்போது, “நண்​பகல் 12 மணிக்கு அனு​ராக் தன்​கர் மருத்​து​வ​மனைக்கு கொண்டு வரப்​பட்​ட​போது, அவர் உயிருடன் இருப்​ப​தற்​கான எந்​தவொரு அறிகுறிகளும் இல்​லை. சுமார் 48 நிமிடங்​கள் சிபிஆர் சிகிச்சை அளித்​தும் அவர் இறந்​து​விட்​டார். மரணத்​துக்​கான சரி​யான காரணம் பிரேதப் பரிசோதனைக்​குப் பிறகே தெரிய​வரும்” என்றார்.
இது குறித்து திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘டிஜிபி அனுராக் தன்கர் உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.