Home செய்திகள் தேசிய செய்திகள் நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து சோனம் வாங்சுக் தனியார் மருத்துவமனைக்கு மாற்றம்

புதுடெல்லி, ஜூலை 22- உண்ணாவிரதம் மேற்​கொண்​டு​ வரும் சோனம் வாங்​சுக்கை மேல் சிகிச்​சைக்​காக தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்ற உயர் நீதி​மன்​றம் அனு​மதி அளித்​துள்​ளது. நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு உள்​ளிட்ட போட்​டித் தேர்வு முறைகேடு விவ​காரத்​தில் மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்​தி, காலநிலை ஆர்​வலர் சோனம் வாங்​சுக் டெல்லி ஜந்​தர் மந்​தரில் ஜூன் 28ம் தேதி கால​வரையற்ற உண்​ணா​விரதப் போராட்​டம் தொடங்​கி​னார். அவரது உடல்​நிலை மோசமடைந்​தது. இதையடுத்​து, டெல்லி உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி கடந்த 18-ம் தேதி மத்​திய அரசின் சப்​தர்​ஜங் மருத்​து​வ​மனை​யில் வலுக்​கட்​டாய​மாக அனு​ம​திக்​கப்​பட்​டார். ஆனாலும் அவர் உண்​ணா​விரத போராட்​டத்தை தொடர்​கிறார். இந்​நிலை​யில், வாங்​சுக்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்றக்கோரி அவரது மனைவி கீதாஞ்​சலி டெல்லி உயர் நீதிமன்றத்​தில் மனு தாக்​கல் செய்​தார். அதில், தனது கணவரின் உடல்​நிலை குறித்து முரண்​பட்ட அறிக்கை வெளி​யிடப்​படு​வ​தாக குற்​றம்​சாட்டி இருந்​தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்​ளு​படி செய்​தார். இதையடுத்து கீதாஞ்​சலி மேல்​முறை​யீடு செய்​தார். இந்த மனுவை தலைமை நீதிபதி டி.கே.உ​பாத்​யாயா மற்​றும் நீதிபதி தேஜஸ் காரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்​தது. விசாரணை​யின்​போது, வாங்​சுக்கை தனி​யார் மருத்​து​வ​மனைக்கு மாற்​று​வ​தில் ஆட்​சேபணை இல்லை என்று மத்​திய அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து நீதிப​தி​கள் பிறப்​பித்த உத்​தர​வில், “சோனம் வாங்சுக்கை மேல் சிகிச்​சைக்​காக குரு​கி​ராமில் உள்ள மெதாந்தா மருத்​து​வ​மனைக்கு மாற்ற வேண்​டும். இது அவருடைய அடிப்படை உரிமையை பாது​காக்​கும்.