Home செய்திகள் தேசிய செய்திகள் தேர்வு சீர்திருத்த குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணரை நியமித்தது ஏன்?

தேர்வு சீர்திருத்த குழுவில் ராக்கெட் விஞ்ஞானி, உளவு நிபுணரை நியமித்தது ஏன்?

புதுடெல்லி, ஜூலை 28- ​போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃ​போசிஸ் இணை நிறு​வனர் நந்​தன் நிலேகனி தலை​மை​யில் உயர் நிலைக் குழு அமைக்​கப்​பட்டு உள்ளது. இந்த குழு​வில் இஸ்ரோ முன்​னாள் தலை​வர் சோம் நாத், இந்​திய உளவுத் துறை முன்​னாள் இயக்​குநர் தபன் டேகா, சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி, கல்​வித்​துறை முன்​னாள் செயலர் அனிதா கர்​வால், போக்​கு​வரத்து துறை நிபுணர் அம்​ரித் லால் மீனா ஆகியோர் நியமிக்​கப்​பட்டு உள்​ளனர்.பெரும்​பாலான போட்​டித் தேர்​வு​கள், நுழைவுத் தேர்​வு​கள் கணினி வழி​யில் நடத்​தப்​படு​கின்​றன.
மருத்​துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்​வும் அடுத்த ஆண்டு முதல் கணினி வழி​யில் நடத்​தப்​படும் என்று அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.இதை கருத்​தில் கொண்டு உலக அளவில் புகழ்​பெற்ற தொழில்​நுட்ப வல்​லுநர் நந்​தன் நிலேகனி தலை​மை​யில் உயர்​நிலைக் குழு அமைக்​கப்​பட்டு உள்​ளது. இவர் ஆதார் ஆணை​யத்​தின் முதல் தலை​வ​ராகப் பணி​யாற்​றிய​வர்.
அவர் உரு​வாக்​கிய கட்டமைப்புகளின் அடிப்​படை​யில் இது​வரை 144 கோடி ஆதார் அட்​டைகள் விநி​யோகிக்​கப்​பட்டு உள்​ளன. தற்​போது போட்​டித் தேர்​வு, நுழைவுத் தேர்​வு​களுக்​காக நம்​பக​மான, பாது​காப்​பான தொழில் ​நுட்ப கட்​டமைப்​பு​களை நந்​தன் நிலேகனி உரு​வாக்க உள்​ளார். ராக்​கெட் விஞ்​ஞானி சோம்​நாத்: இஸ்ரோ முன்​னாள் தலை​வர் சோம்​நாத், ராக்​கெட் விஞ்​ஞானி என்று அழைக்​கப்​படு​கிறார். அவர் இஸ்​ரோ​வில் பணி​யாற்​றிய​போது துல்​லிய​மான திட்டமிடலுக்​காக அனை​வ​ராலும் பாராட்​டப்​பட்​டார்.
இக்​கட்​டான சூழல்​களை திறம்பட கையாள்​வது, தவறுகளை துல்​லிய​மாகக் கண்​டறிவது, அனைத்து தரப்பு நிபுணர்​களை​யும் ஒன்றிணைப்பது உள்​ளிட்ட தலை​மைப் பண்​பு​களுக்​காக சோம்நாத் குழு​வில் இணைக்​கப்​பட்டு உள்​ளார். சென்னை ஐஐடி இயக்​குநர் காமகோடி அடிப்​படை​யில் கணினி விஞ்​ஞானி ஆவார். கணினி வடிவ​மைப்​பு, செயற்கை நுண்ணறிவு, சைபர் பாது​காப்பு உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் அவர் திறம்பட செயல்​பட்டு வரு​கிறார். பொதுத்​தேர்​வு, நுழைவுத்தேர்வு வினாத்​தாள்​களை திருத்​தும் பணியை நேர்த்தியாக மேற்​கொள்ள அவர் மிக முக்​கிய பங்​களிப்பை வழங்க உள்​ளார்.