Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் விடைத்தாளில் முரண்பாடு; உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு

நீட் விடைத்தாளில் முரண்பாடு; உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்கு

புதுடெல்லி, ஆக. 5–- ‘நீட்’ தேர்வில், அசல் ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும், தேசிய தேர்வு முகமை இணையதளத்தில் பதிவேற்றிய ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும் பெரியளவில் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் தேர்வர்கள் தரப்பில் அவசர வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதை விரைந்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் உறுதி அளித்துள்ளார். இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ நுழைவுத்தேர்வு கடந்த ஜூன், 21ல் நடந்தது. ஜூலை 16ல் முடிவு வெளியானது. இந்நிலையில், தேர்வர்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனு: தேசிய தேர்வுகள் முகமை வெளியிட் ட ஓ.எம்.ஆர்., விடைத்தாள் நகல்களில், நாங்கள் அளித்த பதில்களுக்கும், இணையதளத்தில் உள்ள பதில்களுக்கும் வேறுபாடு இருக்கிறது. அசல் ஓ.எம்.ஆர்., விடைத்தாளுக்கும், தேசிய தேர்வு முகமை பதிவேற்றிய ஓ.எம்.ஆர்., விடைத்தாளு க்கும் முரண்பாடு இருக்கிறது.இதனால், திறமையுள்ள மாணவர்களின் மருத்துவப் படிப்பு கனவு பறிபோகும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து தேசிய தேர்வு முகமையை அணுகியும் நிவாரணம் கிடைக்கவில்லை. ‘நீட்’ மருத்துவ கலந்தாய்வு தற்போது நடப்பதால், இந்த வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க தேர்வர்கள் தரப்பில் தலைமை நீதிபதி சூர்யகாந்திடம் முறையிடப்பட்டது. நிலைமையின் தன்மையை கருதி, வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடுவதாக அவர் உறுதி அளித்தார்.