Home செய்திகள் தேசிய செய்திகள் ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான இன்ஜின்கள் தயாரிக்க திட்டம்

ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் இணைந்து போர் விமான இன்ஜின்கள் தயாரிக்க திட்டம்

புதுடெல்லி, ஆக. 16- இந்​தி​யா​வின் 5-ம் தலை​முறை போர் விமானத் திட்​டத்​திற்கு வலு​வூட்​டும் வகை​யில், மேம்​பட்ட நடுத்தர போர் விமானத்​துக்​கான (ஏஎம்​சிஏ) உள்​நாட்டு போர் விமான இன்​ஜினை உரு​வாக்​கு​வதற்​காக இணைந்து செயல்​படப் போவ​தாக முகேஷ் அம்​பானி தலை​மையி​லான ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் மற்​றும் பிரிட்​டனின் ரோல்​ஸ்​-​ராய்ஸ் நிறு​வனங்​கள் நேற்று முன்​தினம் கூட்​டாக அறி​வித்​தன. போர் விமான இன்​ஜின்​களை வடிவ​மைத்​தல், மேம்​படுத்​துதல், தயாரித்​தல் மற்​றும் விநி​யோகிப்​ப​தற்​கான இந்த கூட்டு முயற்​சி​யின் ஒரு பகு​தி​யாக, ஒரு பிரத்​யேக விண்​வெளி எரி​வாயு டர்​பைன் வளாகத்தை உரு​வாக்​கு​வது குறித்து இரு நிறு​வனங்​களும் ஆராய உள்​ளன. இந்த வளாகம் இந்​தி​யா​வின் மின்​சார மற்​றும் உந்​து​விசை தொழில்​நுட்ப மைய​மாக விளங்​கும். பாது​காப்பு ஆராய்ச்சி மற்​றும் மேம்​பாட்டு நிறு​வனத்​தின் (டிஆர்​டிஓ) கீழ் இயங்​கும் வானூர்தி மேம்​பாட்டு முகமை (ஏடிஏ), ஏஎம்​சிஏ திட்​டத்தை அதி​காரப்​பூர்​வ​மாக வடிவ​மைத்து நிர்​வகித்து வரு​கிறது. ஆரம்​ப​கால திட்​ட​மிடலின்​படி, ரூ.15,000 கோடி மதிப்​பிலான இத்​திட்​டத்​தின் முதல் 5 ஏஎம்​சிஏ மாதிரி​களுக்​காக, இறக்​குமதி செய்​யப்​பட்ட அமெரிக்​கா​வின் ஜிஇ எப்​414 இன்​ஜின்​களு​டன் ஏடிஏ தனது பணி​களை முன்​னெடுத்​து வருகிறது.