Home செய்திகள் தேசிய செய்திகள் வாஜ்பாய் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

வாஜ்பாய் நினைவு தினம்; ஜனாதிபதி, பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை

புதுடில்லி, ஆக. 16: டில்லியில் வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன் பிரதமர் மோடி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 16) அனுசரிக்கப்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்திற்கு வந்த ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி சிபிராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், ”அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளில் அவரை நினைவுகூர்கிறோம். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட ஒரு சிறந்த அரசியல் ஆளுமை. தனது வாழ்நாளைத் தேச சேவிற்காக அர்ப்பணித்தார். அவரது முயற்சிகளும் பல தலை முறையினரை ஊக்கப்படுத்தின.

அவரது தலைமைத்துவம் நம் தேசத்தை வலுப்படுத்தியது. நல்லாட்சி மற்றும் மக்கள் நலன் மீதான அவரது கவனம் என்றும் நமக்கு வழிகாட்டியாகத் திகழும்” என குறிப்பிட்டுள்ளார்.