Home மாவட்டங்கள் பெங்களூர் 3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

3 பேரை சுட்டுக்கொன்ற வனத்துறை அதிகாரிகள் மீது எஃப்.ஐ.ஆர்.

Oplus_131072

சாமராஜநகர், ஆகஸ்ட் 16-காவேரி வனவிலங்கு சரணாலயத்திற்குட்பட்ட ஷாக்யா வனப் பகுதியில், வனத்துறை ஊழியர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் மீது ஹனூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்துமேரி காவல் நிலையத்தில் அளித்த புகாரில், மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்களைத் தேடிச் சென்ற தனது கணவர் அந்தோணிசாமி, சகோதரர்கள் செபாஸ்டியன் டேவிட் குமார், ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் பெரியப்பா மகன் மகிமைதாஸ் ஆகியோர் இரவில் பாறையின் அருகே தூங்கிக்கொண்டிருந்தபோது வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதில் 3 பேர் பலியாகினர்; மகிமைதாஸ் தப்பி ஓடிவிட்டார்.அதேவேளையில், வனப்பகுதிக்குள் ஊடுருவிய வேட்டைக்காரர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதால் சுய பாதுகாப்புக்காகவே பதிலடித் தாக்குதல் நடத்தியதாக வனத்துறை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.இச்சம்பவத்தில் அந்தோணிசாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (45) மற்றும் குமார் (33) ஆகியோர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலிருந்து 2 நாட்டுத் துப்பாக்கிகள், 20 கிலோ இறைச்சி, டார்ச் லைட்டுகள், வெடிமருந்து மற்றும் சமையல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.பாதிக்கப்பட்ட குடும்பத்தின் புகார் மற்றும் வனத்துறையின் விளக்கம் ஆகிய இரண்டு கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டு வரப்படும் என்று தெற்கு மண்டல ஐ.ஜி.பி. டாக்டர் எம்.பி.போரலிங்கய்யா தெரிவித்துள்ளார்.