
வாஷிங்டன், ஆக. 18- சர்வதேச எண்ணெய் போக்குவரத்து பாதையின் உயிர் நாடி போல இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை தங்கள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வர அமெரிக்க்கா திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானும் ஓமனும் இணைந்து புதிய திட்டமிடுவதால், டிரம்ப் கடும் கோபம் அடைந்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் ஓமன் தலையிட்டால், அந்த நாட்டின் மீது குண்டு வீசுவோம் என்று எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட அமைதி ஒப்பந்தம் எட்டுவதற்காக போடபட்ட 60 நாள் இடைக்கால ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்த நிலையில், அதனை நீட்டிக்க போவது இல்லை என்று டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். ஓமனுடன் ஈரான் கை கோர்ப்பு ஈரான் வெள்ளைக்கொடி காட்டி சரண் அடைய வேண்டும் என்று டிரம்ப் கூறிய நிலையில், தங்கள் படைகள் தயாராக இருப்பதாக ஈரான் பதிலடி கொடுத்ததால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒருபக்கம் இருக்க ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தை சீர் செய்வது தொடர்பாக ஓமன் – ஈரான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியை பொறுத்தவரை உலக எண்ணெய் வர்த்தகத்தின் 20 சதவீதம் இந்த வழியாகவே நடைபெறுகிறது. முக்கியமான இந்த வழித்தடத்தை எந்தவித கட்டுப்பாடும் இன்றி திறந்துவிட வேண்டும் என்பது அமெரிக்க்காவின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் ஈரான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி தங்கள் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்று ஈரான் கூறி வரும் நிலையில், ஓமனுடன் ஈரான் கை கோர்ப்பது டிரம்புக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.














