
புதுடெல்லி: ஆக. 18-
கர்நாடக மாநில பாஜக-வைச் சேர்ந்த எஸ். விக்னேஷ் ஷிஷிர் ராகுல் காந்தி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த குற்றச்சாட்டுகளின் உண்மை தன்மை குறித்து சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். அந்த
மனுவை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி மற்றும் வி.மோகனா ஆகியோர் விசாரித்து அலகாபாத் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, வழக்கை ஆக.31-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.












