
பெங்களூரு: ஆக. 18-
பெங்களூரு அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ் குமார். இவருடைய வீட்டில் 20 வயது கல்லூரி மாணவி ஒருவர் வாடகைக்கு தங்கி படித்து வருகிறார்.
கடந்த 15-ந் தேதி மாலை 6.25 மணி அளவில், வீட்டில் உள்ள பழுதுபார்க்கும் பணிகளைப் பார்வையிடுவதாகக் கூறி கமலேஷ் குமார் அந்த மாணவியின் வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்கு மாணவியிடம் அவரது கல்லூரி மற்றும் படிப்பு குறித்துப் பேசியுள்ளார்.
திடீரென, மாணவியின் கையில் இருந்த மெஹந்தியைப் பார்ப்பது போல நடித்து,
அவரது கையைப் பிடித்து இழுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி கடுமையாக எதிர்த்தும் அதைப் பொருட்படுத்தாமல் அத்துமீறியுள்ளார். மேலும், தனியாக மீண்டும் சந்திக்க வேண்டும் என்று கூறி ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாக அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகள் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், கமலேஷ் குமாரைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












