Home செய்திகள் தேசிய செய்திகள் தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை

தாக்குதல் ட்ரோன்கள்;குத்தகைக்கு எடுக்கிறது இந்திய கடற்படை

புதுடெல்லி: ஆக. 18- கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை இந்தியா 30 மாதங்களுக்கு குத்தகைக்கு எடுக்கிறது. இதற்காக ரூ.1943 கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.இந்தியப் பெருங்கடல் பகுதியில் தொடர்ச்சியான உளவு பார்த்தல் மற்றும் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தவும், நவீன சென்சார்கள் மற்றும் பல திறன் கொண்ட கருவிகள் மூலம் கடல் எல்லைப் பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்திய கடற்படை திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் இந்திய கடற்படைக்காக இரண்டு சீ கார்டியன் ரக ட்ரோன்களை 30 மாத காலத்திற்கு குத்தகைக்கு எடுப்பதற்காக அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் ஏரோநாட்டிகல் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ரூ.1943 கோடியில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
நீண்ட நேரம் பறக்கும் திறன் கொண்ட இந்த ட்ரோன்கள் இந்தியக் கடற்படையின் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தும் என பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.