Home விளையாட்டு இந்​திய அணி அபார வெற்றி

இந்​திய அணி அபார வெற்றி

காலே, ஆகஸ்ட் 20- இலங்கை – இந்​தியா அணி​கள் இடையி​லான முதல் டெஸ்ட் போட்டி காலே சர்​வ​தேச மைதானத்​தில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் இந்​திய அணி 462 ரன்​கள் குவித்​தது. அதி​கபட்​ச​மாக தேவ்​தத் படிக்​கல் 167, கே.எல்​.​ராகுல் 82, துருவ் ஜூரெல் 51 ரன்​கள் விளாசினர். அதேவேளை​யில் இலங்கை அணி 284 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக சோனல் தினுஷா 100, நிரோஷன் திக்​வெல்லா 80 ரன்​கள் சேர்த்​தனர். 178 ரன்​கள் முன்​னிலை​யுடன் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய இந்​திய அணி 48.5 ஓவர்​களில் 193 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. அதி​கபட்​ச​மாக ரிஷப் பந்த் 66, தேவ்​தத் படிக்​கல் 44, கே.எல்​.​ராகுல் 35 ரன்​கள் சேர்த்​தனர். 372 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த இலங்கை அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 34 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 84 ரன்​கள் எடுத்​தது. நிஷான் மதுஷ்கா பெர்​னாண்டோ 6, பசிந்து சூரியபண்​டாரா 0, கமிந்து மெண்​டிஸ் 2, லகிரு உதரா 16 ரன்​களில் நடையை கட்​டினர். கேப்​டன் தனஞ்​ஜெயா டி சில்வா 31, சோனல் தினுஷா 25 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை இலங்கை அணி தொடர்ந்து விளை​யாடியது. தனது 20-வது அரை சதத்தை கடந்த தனஞ்​ஜெயா டி சில்வா 151 பந்​துகளில், 7 பவுண்​டரி​களு​டன் 59 ரன்​கள் எடுத்த நிலை​யில் ரவீந்​திர ஜடேஜா பந்தை ஸ்வீப் ஷாட் விளை​யாடி​னார்.