Home மாவட்டங்கள் பெங்களூர் சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

சிகிச்சை அளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

சென்னை: ஆக. 21- ​
காஞ்​சிபுரம் மாவட்​டம் வாலாஜா​பாத் அரசு மருத்​து​வ​மனை​யில் நோயாளிக்கு ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​கள் மூலம் ஆக்​சிஜன் மாஸ்க் பொருத்​தப்​படும் வீடியோ காட்​சிகள் வெளி​யாகி அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.
வாலாஜா​பாத் அரசு மருத்துவமனைக்கு நூற்​றுக்​கணக்​கானோர் தினசரி சிகிச்​சைக்​காக வந்து செல்​கின்​றனர். இங்கு நேற்று முன்​தினம் இரவு தீவிர மூச்​சுத்​திணறல் காரண​மாக நோயாளி ஒரு​வர் அவசர சிகிச்​சைப் பிரிவுக்கு அழைத்து வரப்​பட்​டுள்​ளார்.அப்​போது அங்கு பணியி​லிருந்த ஒப்​பந்த தூய்​மைப் பணி​யாளர்​களைக் கொண்டு அவருக்கு ரத்த அழுத்​தம் மற்​றும் நாடித்​துடிப்பு பரிசோதனை செய்​யப்​பட்​டு, ஆக்​ஸிஜன் மாஸ்க் வைப்பது போன்ற காட்​சிகள் அடங்​கிய வீடியோ சமூக வலை​தளங்​களில் வெளி​யாகி வைரலாகி வரு​கிறது.
உரிய மருத்​து​வப் பயிற்சி இல்​லாத நபர்​களைக் கொண்டு அவசர சிகிச்சை அளிக்​கும் இத்​தகைய செயல் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளதாக அப்​பகுதி மக்​கள் கூறுகின்றனர்.
எனவே, அலட்​சி​ய​மாகச் செயல்​பட்ட மருத்​து​வ​மனை நிர்​வாகம், பணி​யாளர்​கள் மீது மாவட்ட நிர்​வாக​மும், மக்​கள் நல்​வாழ்​வுத் துறை​யும் உரிய விசா​ரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​துகின்​றனர்.இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர் கூறும்​போது, “இதுகுறித்து 15 நாட்​களுக்​குள் விளக்​கம் அளிக்​கக்​கோரி நோட்​டீஸ் அனுப்​பப்​பட்​டுள்​ளது. அதன் பிறகு உரிய நடவடிக்​கை எடுக்​கப்​படும்​” என்​றார்​.