Home செய்திகள் தேசிய செய்திகள் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்

தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு; கருத்துக்கணிப்பில் தகவல்

புதுடில்லி: ஆகஸ்ட் 28-
இன்று தேர்தல் நடந்தாலும் தேஜ கூட்டணி 326 இடங்களைக் கைப்பற்ற வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா டுடே – சி வோட்டர் இணைந்து ஆகஸ்ட் 2026ல் நடத்திய ‘மூட் ஆப் தி நேஷன்’ தேசிய அளவிலான புதிய கருத்துக் கணிப்பில் இந்த விவரங்கள் வெளியாகி உள்ளன.இந்த கருத்துக்கணிப்பு ஜூலை 1ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை 25,184 நபர்களிடம் நடத்தப்பட்டு உள்ளது.பாஜ தனித்து 261 இடங்களைப் பெற வாய்ப்புள்ளது. இது, 2024 தேர்தலில் பெற்ற 240 இடங்களை காட்டிலும் அதிகம். காங்கிரஸ் கட்சி 106 இடங்களைக் கைப்பற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 2026ல் கருத்துக் கணிப்போடு ஒப்பிடும்போது, தற்போதைய சூழலில் தேஜ கூட்டணியின் பலம் சற்றே சரிவடைந்துள்ளது.
தேஜ கூட்டணியின் வாக்கு சதவீதம், தற்போது 45.1% என்ற அளவில் சிறிதளவு சரிவைக் காண வாய்ப்புள்ளது என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.