
வாஷிங்டன், ஆகஸ்ட் 28- கனடாவை சேர்ந்த முக்கிய நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். இதுகுறித்து ‘எக்ஸ்’ தளத்தில் நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கனடா சென்றுள்ள அமைச்சர் நிர்மலா சீதாராமன், அங்கு பல்வேறு நிதி நிறுவனங்களின் உயரதிகாரிகளை சந்தித்து பேசினார்.
சன் லைப் பைனான்ஷியல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கெவின் டி. ஸ்ட்ரெய்னை சந்தித்தபோது,
இந்தியாவின் காப்பீட்டு துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தாராளமயமாக்கல் நடவடிக்கைகளை நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். குறிப்பா க, காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு, 74 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதையும், 2047ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்ற அரசின் இலக்கையும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் நீண்டகால முதலீட்டுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்தார். கனக்கார்டு ஜென்யூயிட்டி நிறுவனத்தின் துணைத் தலைவர் ராட் பிலிப்ஸ் மற்றும் தலைமை செயல் அதிகாரி டான் டேவியாவை சந்தித்த அமைச்சர் நிர்மலா, இந்தியா வின் வளர்ச்சி துறைகளில் முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுமாறு கேட்டுக்கொண்டார்.














