Home விளையாட்டு ரபாடா போட்டித் தொடருக்கு புறக்கணிப்பு

ரபாடா போட்டித் தொடருக்கு புறக்கணிப்பு

கேப்டவுன், ஆக. 31- தென் ஆப்ரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஒரு நாள் போட்டி தொடர் செப்டம்பர் 24-ம் தேதி டர்பனில் தொடங்குகிறது. தென் ஆப்ரிக்க அணியின் முக்கிய வீரர் காகிசோ ரபாடாவுக்கு வலது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் குறைந்தது நான்கு வாரங்கள் ஓய்வு எடுக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், “ரபாடா மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் தொடக்க கட்ட மறு வாழ்வு பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதனால் செப்டம்பர் 24 முதல் 30 வரை நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் அவர் கலந்து கொள்ளமாட்டார். டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்பது உடல்நலத்தை பொறுத்தே அமையும். டெஸ்ட் தொடர் நெருங்கும் போது இது குறித்து முடிவு எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.