Home பக்தி வேளாங்கண்ணி தேர் பவனிபல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி தேர் பவனிபல்லாயிரம் பக்தர்கள் பங்கேற்பு

வேளாங்கண்ணி, செப். 7:
வேளாங்கண்ணி பேராலயத்தில் இருந்து தொடங்கிய பெரிய தேர் பவனி கடற்கரை சாலை, ஆரியநாட்டுத்
தெரு, உத்திரிய மாதா தெரு, கடைவீதி வழியாக சென்று மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. இந்த தேர் பவனியை காண வெளிநாடு, வெளி மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மறுநாள், செப்டம்பர் 8, ஆரோக்ய அன்னை பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. மாலை 6 மணிக்கு கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவடைகிறது. இதையொட்டி, நாகை மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தேர் பவனியையொட்டி, 2,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.