Home மாவட்டங்கள் பெங்களூர் சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு

சென்னையில் காவல்துறை விழிப்புணர்வு

சென்னை: செப். 7- ​
காவலர் தினத்தை முன்​னிட்டு பெசன்ட் நகர் கடற்​கரை​யில் நடை​பெற்ற தூய்​மைப் பணியை சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் நேற்று காலை தொடங்கி வைத்​து, கடற்​கரை​யில் கிடந்த குப்​பைகளை அகற்றி தூய்​மைப்​படுத்​தி​னார். இதில், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்​றனர்.
கடந்த 1859-ம் ஆண்​டில் மெட்​ராஸ் மாவட்ட காவல் சட்​டம் நிறைவேற்​றப்​பட்​டு, நவீன மற்​றும் அமைப்பு ரீதி​யான காவல்​துறை தோற்​று​விக்​கப்​பட்ட செப்​டம்​பர் 6-ஆம் நாள் ஆண்​டு​தோறும் ‘காவலர் தின​மாக’ கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இதன் ஒரு பகு​தி​யாக பெசன்ட் நகர் கடற்​கரையை தூய்​மைப்​படுத்​தும் நிகழ்ச்சி நேற்று காலை நடை​பெற்​றது.
காவல் ஆணை​யர் அமல்​ராஜ் தொடங்கி வைத்து தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டார். போலீஸ் அதி​காரி​கள், ஊர்க்​காவல் படை வீரர்​கள், மாநக​ராட்சி ஊழியர்​கள் மற்​றும் என்​சிசி, என்​எஸ்​எஸ் கல்​லூரி மாணவ மாணவி​கள் என 1,000-க்​கும் மேற்​பட்​டோர் கலந்து கொண்​டனர். இதனைத் தொடர்ந்​து, காவலர் தினக் கொண்​டாட்​டத்​தின் தொடர்ச்​சி​யாகப் பல்​வேறு சிறப்​பான நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன.
காவல்​துறை இசைக்​குழு மற்​றும் பேக்​-பைப்​பர் இசைக்​குழு​வினரின் இசை நிகழ்ச்சி நடை​பெற்​றது. சென்​னை​யின் முக்​கிய சந்​திப்​பு​களில் உள்ள எல்​இடி, எல்​சிடி திரைகளில் ‘காவலர் தினம்’ குறித்த வாழ்த்​துச் செய்​தி​கள் மற்​றும் விழிப்​புணர்வு காட்​சிகள் ஒளிபரப்​பப்​பட்​டன. மேலும், சென்​னை​யின் 4 காவல் மண்​டலங்​கள் மற்​றும் 12 மாவட்​டங்​களில் உள்ள குடி​யிருப்​போர் நலச்​சங்​கங்​களு​டன் இணைந்து போதைப்​பொருள் ஒழிப்​பு, சைபர் குற்​றத் தடுப்பு மற்​றும் பாது​காப்பு குறித்த சிறப்பு விழிப்​புணர்வு முகாம்​கள் நடத்​தப்​பட்​டன.