
சென்னை: செப். 7-
செங்குன்றம் அருகே, ஒடிசா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்ட 11.2 கிலோ கஞ்சாவை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு
போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். வடமாநிலத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநரின் உத்தரவின்படி, “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் தீவிர சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் இன்று காலை சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளுடன் வந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்தபோது, அவர்களின் பைகளில் சிறு பொட்டலங்களாக 11.2 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இவர்கள் ஒடிசாவைச் சேர்ந்த கிஷோர் பேபாரி மற்றும் பீகாரைச் சேர்ந்த சந்தின் குமார் என அடையாளம் காணப்பட்டனர். விசாரணையில், குறைந்த கஞ்சா வாங்கி, சென்னை வடமாநிலத் தொழிலாளர்கள் மற்றும்
ஏஜென்ட்டுகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தனர்கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 11.2 கிலோ கஞ்சா மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் கடத்தல் நெட்வொர்க்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.












