Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகள்

நீட் தேர்வில் வெற்றி பெற்ற சகோதரிகள்

மயூர்பஞ்ச், செப். 8- ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தின் மஹுலாபங்கா கிராமத்தைச் சேர்ந்த யாஜ்ஞசேனி மற்றும் திவ்யசேனி என்ற சகோதரிகள், வீடுகளில் மொபைல் நெட்வொர்க் சரியாக கிடைக்காததால், மலை மீது ஏறி படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்கள் கவுரங்க கத்துவா என்ற ஏழை விவசாயி மற்றும் அங்கன்வாடி உதவியாளரான சுனிதா தம்பதியினரின் மகள்கள். வறுமை காரணமாக, தனியார் பயிற்சி மையங்களுக்கு செல்வதற்குப் பதிலாக சுய முயற்சியால் ஆன்லைன் வகுப்புகள் மூலம் படித்தனர். 2026 ஆம் ஆண்டு நீட் தேர்வில் அவர்கள் வெற்றிபெற்றுள்ளனர்.தங்கள் பகுதியில் போதிய மொபைல் நெட்வொர்க் கிடைக்காததால், அருகிலுள்ள மலைக்குன்றின் மீது ஏறி நள்ளிரவு வரை மொபைலிலேயே படித்து வந்தனர். இதில், யாஜ்ஞசேனி தனது 3-வது முயற்சியிலும், திவ்யசேனி தனது முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றனர். இந்த சகோதரிகளின் லட்சியம்,
எதிர்காலத்தில் சிறந்த மருத்துவர்களாக உருபெற்று, ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்வதுதான்.