
புதுடெல்லி: செப்.9-
உலகளவில் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கில் இந்தியா விரைவில் இரண்டாவது இடத்தை பிடிக்க உள்ளது. இப்போது சீனா முதல் இடத்தில் உள்ளது, அங்கு 11,000 கி.மீ. ரயில் பாதைகள் உள்ளன. அமெரிக்கா 1,386 கி.மீ. ரயில் பாதைகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா 1,170 கி.மீ. வழித்தடங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 26 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை செயல்படுகிறது. அமெரிக்காவை விட வெறும் 216 கி.மீ. மட்டுமே நம் நாடு பின்தங்கி உள்ளது. 2014 இல், இந்தியாவின் மெட்ரோ ரயில் நெட்வொர்க் ஐந்து நகரங்களில் 245 கி.மீ. ஆக இருந்தது. இப்போது அது 1,170 கி.மீ. ஆக அதிகரித்துள்ளது.
நாட்டின் பல நகரங்களில் 900 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இதில் ஒரு சிறிய பகுதி கூட செயல்பாட்டுக்கு வந்தாலே, இந்தியா அமெரிக்காவை எளிதில் முந்தி இரண்டாம் இடத்தை பிடிக்கும்.












