Home செய்திகள் உலக செய்திகள் வென்றால் 5 ஆயிரம் டாலர்

வென்றால் 5 ஆயிரம் டாலர்

வாஷிங்டன்: செப்.10-
வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவில், ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் ஒருமுறை, நவம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேர்தல் நடைபெறும். அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தல் 2028-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நடைபெற உள்ளது.
அதிபரின் பதவிக்காலத்தில் பாதி முடிந்த நிலையில், நாடாளுமன்றம், செனட் உறுப்பினர் பதவிகளுக்கும், பல்வேறு மாநிலங்களின் கவர்னர், மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பரில் இந்தத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருப்பதாவது:
வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால், ஒவ்வொரு அமெரிக்கருக்கும் 5 ஆயிரம் டாலர் (ரூ.4.76 லட்சம்) வழங்கப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளான பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் ஆகிய இரண்டிலும் எங்கள் கட்சி பெரும்பான்மை பெற்றால் மட்டுமே இந்தத் தொகை வழங்கப்படும். இந்தப் பணத்தை முழுக்க முழுக்க அமெரிக்காவுக்குள் மட்டுமே செலவிட வேண்டும். இவ்வாறு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக அதிபர் டிரம்ப் மக்களுக்கு பணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளதாக எதிர்க்கட்சியினரும், நெட்டிசன்களும் விமர்சித்து வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள அனைத்து வாக்காளர்களுக்கும் இந்தத் தொகையை வழங்குவதற்கான நிதி எங்கிருந்து பெறப்படும் என்பது குறித்து டிரம்ப் இன்னும் முறையான விளக்கத்தை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.