Home மாவட்டங்கள் பெங்களூர் முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்

முதல்-அமைச்சரான பின் விஜய் முதல் வெளிநாட்டு பயணம்

சென்னை: செப்.10-
தமிழக முதல்வர் விஜய், ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக இங்கிலாந்து பயணமாகிறார். தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக மாற்றுவதையே த.வெ.க. அரசின் முக்கிய இலக்காக அறிவித்துள்ளது. இதற்காக முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சமீபத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தென்கொரியாவிற்கு சென்று, பல நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக சென்னையில் கடந்த ஆகஸ்டு 13 அன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் பல நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
த.வெ.க. அரசு பொறுப்பேற்ற 110 நாட்களில் 104 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து, ரூ.1,02,514 கோடி முதலீடுகளை ஈர்த்து, 1,21,788 பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில், முதலீட்டாளர்களை சந்திக்க முதலமைச்சர் விஜய் தலைமையிலான குழு லண்டன் பயணமாக உள்ளது. இன்று இரவு 10 மணிக்கு சென்னையில் இருந்து துபாய் வழியாக லண்டன் புறப்படுகிறார். செப்டம்பர் 16 வரை அங்கு தங்கியிருந்து, 17ம் தேதி சென்னை திரும்புகிறார்.
லண்டனில் நடைபெறும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதல்வர் விஜய், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைப்பு விடுக்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளுக்காக பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா லண்டன் சென்றுள்ளனர். அமைச்சர் கீர்த்தனாவும் அவரோடு இணைகிறார். விஜய் மேற்கொள்ளும் இந்த வெளிநாட்டு பயணம், அவரது முதலமைச்சர் பதவியேற்ற பிறகு முதல்முறையாக நடைபெறுகிறது. அரசியல், பொருளாதார முன்னேற்றத்திற்காக இந்த பயணம் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.