Home மாவட்டங்கள் சென்னை இன்று டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

இன்று டில்லி செல்கிறார் முதல்வர் விஜய்

சென்னை, நவ. 16-
தமிழக முதல்வர் விஜய் இன்று (நவம்பர் 16) டில்லி செல்கிறார். இதற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து பகல் 1 மணிக்கு சிறப்பு விமானத்தில் அவர் புறப்படுகிறார். டில்லியில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.
டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவின் புத்தக வெளியீட்டு விழாவாகும். இதில் பங்கேற்பதற்காகவே முதல்வர் விஜய் டில்லி செல்கிறார்.
இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டியே தீருவோம் என கர்நாடக முதல்வர் சிவகுமார், பிரதமர் மோடி பங்கேற்ற விழாவில் பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு தமிழக மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்காமல் தடுக்க, தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.