
பெங்களூரு, நவ. 16-
மனைவி பிரிந்து சென்ற ஆத்திரத்தில் 8 பழைய இரும்புக் கடை குடோன்களுக்குத் தீ வைத்து, புகைமூட்டத்தால் நபர் பலியாகக் காரணமான ஜீவன் ராஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த ஜீவன் ராஜ், வெங்காய வியாபாரம் செய்து வந்த நிலையில், குடும்பத் தகராறில் மனைவி தாய் வீட்டிற்குச் சென்ற கோபத்தில் அத்திபெலே, ஆனேக்கல் மற்றும் ஜிகனி பகுதிகளில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அடுத்தடுத்து 8 குடோன்களுக்குத் தீ வைத்துள்ளார்.
வீடியோ எடுத்த குற்றவாளி:
தீ வைப்பதைச் செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்துகொண்ட ஜீவன் ராஜ், அங்கேயே நின்று வேடிக்கை பார்த்துள்ளான்; அப்போது குடோனில் தூங்கிக் கொண்டிருந்த மணிகண்டன் என்பவர் புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.200 சிசிடிவி காட்சிகள் ஆய்வு:தொடக்கத்தில் விபத்து என நம்பப்பட்ட நிலையில், அத்திபெலே காவல் ஆய்வாளர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சிடி-100 பைக்கில் வலம் வந்த குற்றவாளியை 15 நாள் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு கைது செய்தனர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக புதன்களுக்கு தீ வைத்தது சரியா என்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது













