
சென்னை: செப். 10-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி. ராஜா, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து, கட்சியின் அலுவலகச் செயலாளர் எம்.ஆர். ரகுநாதன் வெளியிட்ட அறிக்கையில், “டி. ராஜாவுக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளது. அவர் முழு உடல் பரிசோதனைக்காக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் உடல்நலத்துடன் உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்












