பிட்காயின் மோசடி வழக்கு தீவிரம் மேலும் ஒரு குற்றவாளி கைது

பெங்களூர், அக்.5-
கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்திய பிட் காயின் முறைகேடு விசாரணை தீவிரமடைந்து வருகிறது. இதில் எஸ்.ஐ.டி. அதிகாரிகள் மேலும் ஒரு முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
பிட் காயன் மெகா மோசடி வழக்கில் ஏற்கனவே ஸ்ரீ கி என்ற ஸ்ரீ கிருஷ்ணாவை கைது செய்துள்ளனர். இவரைப் போல மேலும் ஒரு முக்கிய குற்றவாளி தலைமறைவாக இருந்து வந்தார். அவரை பல இடங்களில் தேடி வந்தனர்.
இந்த குற்றவாளி பஞ்சாபில் தங்கி இருந்த தெரிய வந்தது. அதனால் அங்கு சென்று அவரை கைது செய்தனர். ராஜேந்திர சிங் என்பவர் தான் அந்த தேடப் பட்டு வந்த குற்றவாளி. இவரும் பிட் காயன் விவகாரத்தில் பல கோடி மோசடி செய்தவர். தனியாக வெப் சைட் ஏற்படுத்தி அதன் மூலம் ஹேக் செய்தது தெரிய வந்தது.இவர் ஆன் லைன் சூதாட்டமும் நடத்தி முறைகேடு செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.முதல் குற்றவாளி ஸ்ரீகி, மற்றும் சுனீல் ஹெக்டே, ஹேமந்த் முத்தப்பா ஆகியோரிடம் சிசிபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.,மற்றும் அவருடன் முறைகேடு தொடர்பாக கைது செய்துள்ளவர்களை வழக்கில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பஞ்சாபில் எஸ்.ஐ.டி. யினர் கைது செய்துள்ள ராஜேந்திர சிங்கை ஏ.டி.ஜி.பி. மனீஷ் கப்ரீகர் முன்னிலையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.31 பிட் காயன் 9 கோடி ரூபாய் மதிப்புள்ளதை பறிமுதல் செய்தனர்.கடந்த 2020 ல் கெம்பே கவுடா நகரில் டிரக் விற்பனை செய்ய முயற்சித்த போது ஸ்ரீ கி கைது செய்யப் பட்டார். அதன் பின்னர் நடந்த விசாரணையில் தான் ஆன்லைன் கேம் மோசடிகள் தெரிய வந்தது.