
சென்னை: செப்.15-
தமிழக அரசு பணத்தில் முதலமைச்சர் விஜய் லண்டனில் உல்லாசமாக இருப்பதாக திமுக பிஜேபி உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. இதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அதில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் சென்றுள்ள பயணம் வெற்றி அடைந்து இருப்பதாகவும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விஜய் ஒரு வார கால பயணமாக லண்டன் சென்றுள்ளார். அங்கு நடிகர் அஜித்குமார் பங்கேற்ற கார் ரேஸ் போட்டியை தொடங்கி வைத்தார். நடிகர் அஜித்குமாரை ஓடோடி சென்று கட்டி தழுவி முத்தமிட்டார். கார் ரேஸ் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது முதலமைச்சர் விஜய் பக்கத்தில் இருந்து திரிஷா எட்டி பார்ப்பது போன்ற வீடியோக்கள் வெளியாகிய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் முதல்வர் விஜய் லண்டன் பயணம் தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்தார் . அரசு படத்தில் உல்லாச பயணம் மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். திமுகவின் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் மற்றும் பேச்சாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக காது கூசும் அளவுக்கு விமர்சிக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் வெளிநாட்டு பயணம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறும் பது விஜய் பயணம்
வெளிநாட்டு முதலீடு ஈர்ப்பதாக தெரியவில்லை. என்று குற்றம் சாட்டினார். தமிழக பிஜேபி தலைவர் நயினார் நாகேந்திரன் இது தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். தமிழக முதல்வர் விஜய் அரசு வெளிநாட்டில் உல்லாசமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்
முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் குறித்து திமுக, பாஜக கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், ரூ.11,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு பதிலடி கொடுத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் பயணம் தொடர்பாக எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் பாஜக ஆகியவை கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. முதலமைச்சர் விஜய் மக்களின் வரிப்பணத்தில் லண்டனுக்குச் சொகுசுப் பயணம் மேற்கொண்டுள்ளதாகவும், முதலீடுகளை ஈர்க்கச் சென்ற இடத்தில் நடிகர் அஜித் குமார் பங்கேற்ற கார் பந்தயத்தைப் பார்க்கவே சென்றுள்ளார் என்றும் திமுகவின் ‘முரசொலி’ நாளிதழ் சாடியுள்ளது. இதேபோல், இந்த பயணத்திற்கான அரசு செலவுகள் மற்றும் ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்து வெளிப்படையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழக அரசு தரப்பில், சம்வர்தனா மதர்சன் நிறுவனத்துடன் ரூ.11,000 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், இதன் மூலம் 7,000 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அமையவுள்ள ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ திட்டத்திற்கான வரைபடங்களைத் தயாரிக்கும் நோக்கிலேயே சில்வர்ஸ்டோன் கார் பந்தய ஓடுதளத்தை முதலமைச்சர் பார்வையிட்டார் என்றும், அரசியல் லாபத்திற்காகவே எதிர்க்கட்சிகள் தேவையின்றி விமர்சிப்பதாகவும் தமிழக வெற்றி கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













