Home மாவட்டங்கள் பெங்களூர் “ஸ்டாலின் உதவியை காங்கிரஸ் மறந்துவிட்டு.. முதுகில் குத்திவிட்டது.!” மோடி ஆவேசம்

“ஸ்டாலின் உதவியை காங்கிரஸ் மறந்துவிட்டு.. முதுகில் குத்திவிட்டது.!” மோடி ஆவேசம்

பெங்களூர், மே 11- – திமுக முதுகில் காங்கிரஸ் கட்சி குத்திவிட்டதாக மிகக் கடுமையாக விமர்சித்துள்ள பிரதமர் மோடி, 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான் காரணம் என்றும் ஆனால் அரசியல் காற்று மாறியவுடன் திமுகவையே காங்கிரஸ் கைவிட்டு விட்டதாகக் கடுமையாகச் சாடியுள்ளது. தமிழ்நாடு அரசியல் இப்போது மொத்தமாக மாறிவிட்டது. கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாகத் திராவிட கட்சிகள் இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் அமைந்துள்ளது. முதல்வராக விஜய் பதவியேற்று இருக்கிறார். அதேபோல இத்தனை காலம் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி இப்போது தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. காங்கிரஸ் மீது பாய்ச்சல் தவெகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸை திமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். திமுகவின் முதுகில் தவெக குத்திவிட்டதாகக் கூட விமர்சித்தனர். இதற்கிடையே பிரதமர் மோடியும் காங்கிரஸ் மீது பாய்ந்துள்ளது. அதிகாரத்திற்காக திமுக முதுகில் காங்கிரஸ் குத்திவிட்டதாக அவர் சாடியுள்ளார். இதற்கிடையே பெங்களூரில் உள்ள HAL விமான நிலையத்தில் நடைபெற்ற பாஜக பேரணியில் உரையாற்றிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தார். புதிய முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்துச் சொன்ன கையோடு, தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸை மிகக் கடுமையாக விமர்சித்தார் மோடி! திமுக முதுகில் குத்திவிட்டது தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றத்தை வைத்து காங்கிரஸைக் கடுமையாகச் சாடியுள்ளார் பிரதமர். இது தொடர்பாக அவர், “கடந்த 25-30 ஆண்டுகளாக திமுகவுடன் ஒட்டிக்கொண்டு இருந்த காங்கிரஸ், பலமுறை திமுகவால் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டது. 2014க்கு முன்னால் காங்கிரஸ் தலைமையிலான அரசு 10 ஆண்டுகள் நீடித்ததற்கே திமுக தான் காரணம். ஆனால், இப்போது அரசியல் காற்று சற்று மாறியவுடன், தங்களுக்கு உதவிய திமுகவையே காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது. காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி கட்சி. அதிகாரப் பசிக்காக யாரை வேண்டுமானாலும் முதுகில் குத்தும். இப்போது உயிர் பிழைக்க மற்றொரு கட்சியின் (தவெக) முதுகில் ஏறிச் சவாரி செய்யப் பார்க்கிறது” என பிரதமர் மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் பிரதமர் மோடி சொல்வதைத்தான் திமுகவும் தனது தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளது.