
லண்டன்: செப்.13- லண்டனில் நடைபெற்ற கார் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். முன்னதாக பந்தயத்தில் பங்கேற்ற நடிகர் அஜித் குமாரை, முதல்வர் விஜய் ஆரத்தழுவி வாழ்த்தினார். தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக 6 நாள் அரசு முறை பயணமாக முதல்வர் விஜய் லண்டன் வந்துள்ளார். இந்நிலையில், லண்டனில் இருந்து 128 கி.மீ. தொலைவில் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய மைதானத்துக்கு முதல்வர் விஜய் நேற்று சென்றார். இங்கு நடைபெறும் மிச்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்தப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்றார். அவருடன் இந்தியாவைச் சேர்ந்த முன்னணி கார் பந்தய வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்த போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 9.30 மணியளவில் தொடங்கியது. முன்னதாகப் பந்தயத்தைத் தொடங்கி வைக்க வந்த முதல்வர் விஜய்யைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அதைப் போலவே நடிகர் அஜித்தின் ரசிகர்களும் ஏராளமானோர் குவிந்திருந்தனர். மைதானத்தில் இரண்டு நடிகர்களைப் பார்த்ததும் அவர்கள் உற்சாகமாகக் குரல் எழுப்பி மகிழ்ந்தனர்.மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய்யை, நடிகர் அஜித்குமார் கட்டித் தழுவி வரவேற்றார். இதைப் பார்த்ததும் ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். இந்த கார் பந்தயத்தில் தனது ‘ரெட் ஆன்ட் பை விராஜ்’ அணியின் சார்பில் அஜித் பங்கேற்கிறார்.எல்எம்பி3 புரோ/ஆம் பந்தயத்தில் அவர் பங்கேற்கிறார். இதையடுத்து பந்தயத்தில் பங்கேற்க மைதானத்துக்கு நடிகர் அஜித்குமார் வந்தார். பின்னர் மைதானத்துக்கு சென்ற முதல்வர் விஜய், நடிகர் அஜித்குமாரின் பந்தயக் கார் அருகே சென்று ஆரத்தழுவி வாழ்த்தினார். அங்கிருந்தபடி இருவரும் ரசிகர்களின் கரகோஷத்தை ஏற்றுக்கொண்டனர். மோட்டார் கார் பந்தயத்துக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் அஜித் குமார் கூறியதாவது: இந்தப் போட்டியைத் தொடங்கி வைக்க வரும் முதல்வர் விஜய்யை வரவேற்கிறேன். இது போன்ற பிரம்மாண்டமான விளையாட்டு நிகழ்வுகள் எதிர்காலத்தில் இந்தியாவில் நடத்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சில்வர்ஸ்டோன் மைதானத்தில் எங்களைச் சந்திக்கத் தனது பரபரப்பான பணிக்கு இடையிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்ததற்காகத் தமிழக முதல்வர் விஜய்க்கு நான் மிகுந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.விளையாட்டுத் துறையை ஊக்குவிக்க முதல்வர் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். எனவே, இதுபோன்ற விளையாட்டு பந்தயங்களை இந்தியா மற்றும் சென்னையில் நடத்துவதற்குத் தேவையானவை என்ன என்பதை நேரில் வந்து பார்வையிடுமாறு நாங்கள் அவருக்கு அழைப்பு விடுத்தோம். இவ்வாறு நடிகர் அஜித் தெரிவித்தார்.













