
டெல்லி: செப்.13-இந்தியா – சீனா இடையேயான மோதல் முடிவுக்கு வந்துள்ளது. டெல்லியில் நேற்று தொடங்கி இன்று வரை நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்றுள்ளார். பிரதமர் மோடியுடன் இருதரப்பு உறவு பற்றி விவாதித்தார். இந்நிலையில் தான் நேற்று இரவு பிரிக்ஸ் மாநாட்டிற்கு வந்த தலைவர்களுக்கு பிரதமர் மோடி ‘டின்னர்’ விருந்து வழங்கினார். இதனை சீன அதிபர் ஜி ஜின்பிங் திடீரென்று புறக்கணித்த சம்பவம் பரபரப்பை கிளப்பி உள்ளது.இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை உள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் கல்வான் பள்ளத்தாக்கில் இருநாடுகளின் ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இருநாடுகளின் உறவு பெரிதும் பாதிக்கப்பட்டது.ஆனால் கடந்த ஆண்டு பிரதமர் மோடி சீனாவிற்கு சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்றார். இதையடுத்து பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று 2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று மதியம் டெல்லி வந்தார். அவர் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு முதல் முதலாக இந்தியா வந்துள்ளார். உற்சாகமாக வரவேற்பு வழங்கப்பட்டது.இந்தியா தலைமையில் டெல்லியில் நேற்று தொடங்கிய பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஜி ஜின்பிங் பங்கேற்றார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் அரங்கிற்கு வந்த ஜி ஜின்பிங்கை, பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார். அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடியை ‘ஒன் டூ ஒன்’ முறையில் சந்தித்து பேசினார். இருநாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்துவது தொடர்பாக இருவரும் விவாதித்தனர்.அதன்பிறகு இரவில் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து உலக தலைவர்களும் டின்னர் விருந்து வழங்கினார். பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உறுப்பு நாடுகள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த தலைவர்களுக்கு டின்னர் விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள சீனா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர்கள் பங்கேற்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் அதன் பட்டத்து இளவரசர் செய்க் காலித் பின் முகமது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். அதன்பிறகு அவர் உடனடியாக ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டு சென்றார். இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் அவர் டின்னர் விருந்தில் பங்கேற்கவில்லை. அதேபோல் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் டின்னர் விருந்தில் பங்கேற்கவில்லை. முதல் நாள் பிரிக்ஸ் உச்சி மாநாடு முடிவடைந்த பிறகு ஹோட்டலுக்கு சென்ற ஜி ஜின்பிங், பிரதமர் மோடியின் டின்னர் விருந்துக்கு வரவில்லை. அவர் எதற்காக டின்னர் விருந்துக்கு வரவில்லை என்பது பற்றி இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை. இதனால் ஜி ஜின்பிங் ஏதாவது அதிருப்தி, கோபத்தில் உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தற்போது வலைதளங்களில் விவாதமாக மாறி உள்ளது. இருப்பினும் இந்த டின்னர் விருந்தில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பிற நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள், வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்களான அமித்ஷா ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், அஸ்வினி வைஷ்ணவ்,சிவராஜ்சிங் சவுகான், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி, அசாம் முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உள்பட பலர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













