Home செய்திகள் தேசிய செய்திகள் அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்

அமைப்பு சாரா ஊழியர்களுக்கு இனி பிஎஃப் திட்டம்

புதுடெல்லி: ஜூலை 18-
அமைப்பு சாரா ஊழியர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​களுக்​கும் இனி வருங்​கால வைப்பு நிதித்​திட்​டத்​தில் (பிஎஃப்) பணம் பங்​களிப்​பு செய்​யும் வசதி விரை​வில் அமலுக்கு வரவுள்​ளது.
அமைப்பு சாரா தொழிலா​ளர்​கள், சுய​வேலை​வாய்ப்பு பெறு​பவர்​கள், கிக் தொழிலா​ளர்​கள், விலக்கு அளிக்​கப்​பட்ட நிறு​வனத்​தில் பணிபுரிபவர்​களுக்கு சமூகப் பாது​காப்பை வழங்​கும் நோக்​கில் வருங்​கால வைப்பு நிதி அமைப்​பு(இபிஎஃப்ஓ) புதி​தாக பிஎஃப் திட்​டத்​தைத் தயார் செய்து வரு​கிறது. புதிய திட்​டம் அமலுக்கு வரும்​போது இந்​தத் தொழிலா​ளர்​களும் பிஎஃப் திட்​டத்​தில் சேர்ந்து ஓய்​வூ​தி​யம் உள்​ளிட்ட பயன்​களைப் பெற முடி​யும்.
ந்​தத் திட்​டத்​தில் சேரும் தொழிலா​ளர்​களுக்கு பணம் பிடித்​தம் செய்​யப்​படு​வது தற்​போதைய இபிஎஃப்ஓ மாதிரியைப் பின்​பற்​றியே அமை​யும். இதில் சேரும் புதிய சந்​தா​தா​ரர்​கள் தினசரி அல்​லது ஆண்​டு​தோறும் நிதி பங்​களிப்​புச் செய்​யும் வசதி​யைப் பெறு​வர். இவர்​கள் சார்​பில் சேமிக்​கப்​படும் தொகைக்கு வட்டி மற்​றும் வரிச் சலுகைகளும் கிடைக்​கும். அதாவது, ஆண்​டுக்கு ரூ.2.5 லட்​சம் வரையி​லான பங்​களிப்​புக்​கும், அதற்​கான வட்​டிக்​கும் முழு​மை​யான வரி விலக்கு அளிக்​கப்​படும்.