Home மாவட்டங்கள் சென்னை அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

அரசு மரியாதை உடன் இறுதி சடங்கு

மதுரை: செப். 12:
பேராசிரியர் சாலமன் பாப்பையாவுக்கு இன்று (செப். 12) அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.
‘பட்டிமன்ற பிதாமகன்’ எனப் போற்றப்படும் சாலமன் பாப்பையா, தனது நகைச்சுவைப் பேச்சாலும் இலக்கியக் கருத்துகளாலும் தற்போதைய தலைமுறையினரையும் ஈர்த்தவர். செப். 5-ஆம் தேதி விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நடைபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சியே அவரது கடைசி நிகழ்ச்சியாக அமைந்தது. அதன்பின், உடல்நலக்குறைவு காரணமாக அவர் ஓய்வில் இருந்தார். நேற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சென்ற நிலையில், மதியம் அவர் காலமானார். அவருக்கு மகனும் மகளும் உள்ளனர். அவரது மனைவி ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு காலமானார். சாலமன் பாப்பையாவின் உடல், மதுரை ஞானஒளிவுபுரம் விசுவாசபுரியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று (செப். 12) காலை 10 மணிக்கு இறுதி ஊர்வலம் தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு உடல் தகனம் செய்யப்படுகிறது. சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என அமைச்சர் நிர்மல்குமார் அறிவித்துள்ளார்.