Home செய்திகள் உலக செய்திகள் பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்

பிரிட்டன் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கும் இந்திய விமானிகள்

லண்டன்: செப். 12:
இந்திய விமானப்படையில் தகுதிபெற்ற 3 விமானப் பயிற்றுநர்கள், பிரிட்டன் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக இங்கிலாந்தில் உள்ள ராயல் விமானப்படையில் இணைந்துள்ளனர். இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க முக்கிய மைல்கல்லாகக் கருதப்படும் இந்த நடவடிக்கையின் கீழ், இந்திய விமானப்படையில் தகுதி பெற்ற 3 பயிற்றுநர்கள், பிரிட்டன் அதிவேக ஜெட் விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக, இங்கிலாந்தின் வேல்ஸில் உள்ள ராயல் ஏர் போர்ஸில் இணைந்துள்ளனர்.
இந்திய பாதுகாப்புத் துறையில் இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகக் கருதப்படுகிறது. இந்திய விமானப்படை வரலாற்றிலேயே, அதன் பயிற்றுநர்கள் பிரிட்டனில் அந்நாட்டின் அதிவேக போர்விமான (Fast-jet) விமானிகளுக்குப் பயிற்சி அளிப்பது இதுவே முதல் முறை ஆகும். ஜெட் ரக விமானங்களை இயக்குவது தொடர்பாக பிரிட்டன் விமானிகளுக்கு இந்த இந்தியப் பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். இந்த மூன்று பயிற்றுநர்களும் 2 ஆண்டுகள் அங்கு பணியாற்றுவார்கள். பிரிட்டன் தளபதிகளின் கீழ் இவர்கள் பயிற்சி பணிகளை மேற்கொண்டாலும், தொடர்ந்து இந்திய விமானப்படையின் நேரடி கட்டுப்பாட்டின் கீழேயே செயல்படுவார்கள். பயிற்சி நடவடிக்கைகள் பிரிட்டன் தளபதிகளின் கீழ் நடைபெறும் நிலையில், இவர்களின் நிர்வாக மற்றும் சேவை சார்ந்த தொடர்பு இந்திய விமானப்படையுடனேயே தொடரும். இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று முக்கிய ராணுவ அகாடமிகளிலும் இந்திய அதிகாரிகள் பயிற்றுநர்களாகப் பணியாற்றும் பெருமையைப் பெற்றுள்ளனர். இதன் மூலம், பிரிட்டன் ராணுவத்தின் மூன்று முக்கிய அமைப்புகளிலும் இந்திய அதிகாரிகள் பயிற்றுநர்களாக இடம்பெற்றுள்ளனர்.